திங்கள், 26 மார்ச், 2012

அழித்து விடு அர்ஜுனா...

“”எதிரே நிற்பவர்கள் என் குடும்பத்தார், என் உறவினர்கள், நேற்று வரை ஒரே குடும்பத்தில் ஒரே உறைவிடத்தில் ஒன்றாய் வளர்ந்து, ஒன்றாய் உறங்கி, ஒன்றாய் உண்டு களித்தவர்கள் என்ற உறவின் உணர்வுகளை ஒட்டு மொத்தமாய் கொன்று விடு, அம்பராத்தூணியில் அயர்ந்துறங்கும் அம்பை எடு, வில்லில் பொருத்தி நிமிர்த்திப் பிடி, புருவத்துக்கு மத்தியில் புலன்களை அடக்கு, எதிரில் தெரிவது அதர்மம் எனும் எதிரி மட்டுமே, நாணை இழு, அம்பின் கூர்முனைக்கு அதர்மம் வாழும் இதயம் மட்டுமே இலக்காக்கட்டும். அர்ஜுனா, அழித்து விடு, விழுவது உறவானாலும், அழிவது அதர்மமாகட்டும்””


குருஷேத்திர என்கவுண்டர் நமக்கெல்லாம் ஒரு பால பாடம்.

புதன், 6 ஜூலை, 2011

மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)

மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்) 

எவனோ ஒருவன் உண்ணவிருந்த
பழமொன்றை எங்கிருந்தோ வந்த
குரங்கொன்று கவ்விச் சென்று,
எட்ட முடியா உயரத்தில்
உட்கார்ந்து கொண்டு,,
சிறிதாய்த் தெரியும்
நம்மைப் பார்த்துச் சிரிக்கும்..!!

அதைப்போலவே,

எவனோ ஒருவன் கொள்ளவிருந்த
கொஞ்சம் பணத்தையும்
முகம் (தெரியா) தெரிந்த ஒருவன்
அபகரித்து விட்டு எட்ட முடியா
அரியணையில் ஏறி அமர்வான்..
அவன் மட்டும் மேலே உயர்வான்
மற்றவர்கள் எதிர் திசையில்..!!

இவர்கள் தவறு செய்யவில்லை..!!
குரங்கிலிருந்து தோன்றிய பின்னர்
ஆறாம் அறிவை வாங்க மறந்தவர்கள்..!!

இப்படிக்கு,
 நான்

சனி, 2 ஜூலை, 2011

இது ஒரு வலைபதிவு சோம்பேறிகளின் முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி..........


நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.